வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்கப்படும் – என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் நேற்று முன்வைக்கப்பட்டது.
குறித்த பட்ஜட்டில் மக்கள் நலத்திட்டங்கள் எதுவும் இல்லை என்பதால் அதற்கு ஆதரவளிக்க முடியாது எனவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டார்.
