பிரதமர் ரணிலின் காலைவார தயாரில்லை! நாட்டுக்கு நல்லது நடந்தால் வரவேற்பேன்!!

” பாராளுமன்றத்தில் பிரதமர், ரணில் விக்கிரமசிங்கவின் காலைவாரிட நாம் தயாரில்லை.”

இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவரின் முகநூல் பதிவு வருமாறு,

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமது அரசில் பங்குபெற எமது தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் அழைப்பு விடுத்தார். நாம் நாகரீகமாக மறுத்து விட்டோம்.

அவர் எமது முன்னாள் பிரதமர். அவரது பலமும், பலவீனமும் எனக்கு நன்கு தெரியும். பலவீனம் பற்றி பேச விரும்பவில்லை.

சர்வதேச தொடர்பாடல் தொடர்பான, அவரது பலம் மூலம் நாட்டுக்கு நன்மை நடக்குமாயின் அதை நான் ஒரு இவங்கையராக வரவேற்கிறேன்.

அவரது அரசில் பங்கெடுக்கும் “டீல்” அரசியலையும் நாம் செய்யவில்லை. அதேவேளை, சும்மா “களரிகதை” பேசி “பாழ்” அரசியலும் செய்ய விரும்பவில்லை.

இன்று நாட்டில் உணவு இல்லை. மருந்து இல்லை. எரிவாயு இல்லை. உரம் இல்ஸை. இவற்றில் எதையாவது அவர் தீர்த்து வைப்பாரேயானால், அதை செய்யட்டுமே.

இன்றைய சூழலில், பாராளுமன்றத்தில் அவரது காலை இழுத்து விட நாம் விரும்பவில்லை.

ஒவ்வொரு விஷயமாக அளந்து, நிறுத்து பார்த்து, நல்ல விஷயங்களுக்கு ஆதரவளிப்போம். இதுதான் பொறுப்புள்ள செயற்பாடு என நினைக்கிறேன்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles