பெற்றோலை கடத்திய இருவர் கைது!

மட்டக்களப்பு – வெல்லாவெளி பிரதேசத்தில் இருந்து அம்பாறை மகா ஓயா பிரதேசத்திற்கு பெற்றோலை கடத்திச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மகாஓயா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் 45 வயதுடைய பொலிஸ்சாஜன் மற்றும் ஓய்வு பெற்ற 41 வயதுடைய இராணுவ வீரர் ஆகிய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெல்லாவெளி வீதிச் சோதனைச் சாவடியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதுடன், 910 லீற்றர் பெற்றோலும் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles