ரணிலே குட்டையை குழப்பினார்!

எமது கட்சியுடன் இணைந்து பயணிப்பதற்கு இருந்த வாய்ப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே இல்லாது செய்துகொண்டார் – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினரும், ஜனாதிபதியும் இணைந்தே புதிய ஆட்சியை உருவாக்கினர். ரணில் விக்கிரமசிங்கவை பிரதராக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்பிறகு அவர் ஜனாதிபதி பதவிக்கு வருவதற்கும் எமது கட்சியால் நேசக்கரம் நீட்டப்பட்டது.

அடுத்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலும் கலந்துரையாடல் இடம்பெற்றது. ஆனால் இறுதி முடிவுக்கு வருவதற்குள் எமது கட்சியில் இருந்து ஒரு பிரிவினரை எடுத்துவிட்டார். இதனையடுத்தே பேச்சுகள் நிறுத்தப்பட்டன. நாமும் ஒரு வேட்பாளரை நிறுத்தும் முடிவை எடுத்தோம்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளரை தேசிய சம்மேளனத்திலேயே மாற்ற முடியும். வீதியில் நடக்கும் கூட்டங்களால் அதனை மாற்ற முடியாது. செயலாளர் பதவியில் மாற்றம் வராது.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles