ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மீண்டும் சுகாதார அமைச்சராக நியமிக்கப்படக்கூடும் என சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மட்டத்தில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
தற்போதைய சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை முன்வைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராகிவருகின்றது.
இதற்கிடையில் கெஹலிய ரம்புக்வெல்ல பதவி விலகக்கூடும் எனவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே கெஹலிய பதவி விலகினாலோ அல்லது நம்பிக்கையில்லாப் பிரேரணைமூலம் பதவி விலக்கப்பட்டாலோ புதிய சுகாதார அமைச்சராக ராஜித நியமிக்கப்படலாம் என தெரியவருகின்றது.
