ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் வெகுவிரைவில் புதியதொரு அரசியல் கூட்டணி உதயமாகும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நேற்று அறிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நாட்டு மக்கள் மாற்றத்தையே எதிர்பார்க்கின்றனர். ரணில் – ராஜபக்ச ஆட்சிக்கு பதிலாக ஊழல், மோசடியற்ற ஆட்சியையே கோருகின்றனர். மாற்று தேர்வு பற்றி ஆராய்கையில் ஐக்கிய மக்கள் சக்தியே முதன்மை தேர்வாக உள்ளது. எமது கட்சியால் மட்டுமே ஊழல், மோசடியற்ற நல்லாட்சியை வழங்ககூடியதாக இருக்கும்.
அந்தவகையில் புதியதொரு அரசியல் கூட்டணி வெகுவிரைவில் உதயமாகும். அதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளன.” – என்றார்.
