வேட்புமனுக்களை கையளித்த அரச உத்தியோகத்தர்களுக்கு மீண்டும் பணிக்கு திரும்புவதற்கு வாய்ப்பு

உள்ளூராட்சி மன்றத் சபை தேர்தலுக்கான வேட்புமனுக்களை கையளித்த அரச உத்தியோகத்தர்களுக்கு மீண்டும் பணிக்கு திரும்புவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த அறிவிப்பை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர வெளியிட்டுள்ளார்.

இதன்படி, குறித்த அரச உத்தியோகத்தர்கள் எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் மீண்டும் பணிக்குத் திரும்ப வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இது தொடர்பான சுற்றறிக்கை நாளை (08-05-2023) திங்கட்கிழமை வெளியிடப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார்.

மேலும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, வேட்புமனுக்களைத் தாக்கல் செய்த அரச ஊழியர்கள், தாங்கள் போட்டியிடும் தொகுதியிலுள்ள அரச நிறுவனங்களை தவிர்த்து, அருகிலுள்ள வேறு தொகுதிகளில், இடமாற்றம் மூலம் சேவையில் ஈடுபட கடந்த வாரம் அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது குறிப்படத்தக்கது.

Related Articles

Latest Articles