அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்துக்கு எதிராக மகாசங்கத்தினர் கொழும்பில் இன்று ஒன்றுகூடி தீர்மானமொன்றை அறிவிக்கவுள்ளனர்.
” 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதைவிட அதனை முழுமையாக நீக்க வேண்டும். அதனை வலியுறுத்துவோம்.” – என்று கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரசின் கொள்கைத் திட்டத்தை சபையில் இன்று முன்வைத்து உரையாற்றவுள்ளார். இதன்போது அவர் 13 ஆவது திருத்தச்சட்டம் குறித்து அறிவிப்பொன்றை விடுப்பாரென எதிர்பார்க்கப்படுகின்றது.
அவ்வாறு ஜனாதிபதி அறிவிப்பு விடுத்தால் அதனை முறியடிக்க மகாசங்கத்தினர் களத்தில் இறங்குவார்கள் என பௌத்த தேரர்கள் சிலர் நேற்று ஊடக சந்திப்பொன்றை நடத்தி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மூன்று பீடங்களின் பிக்கு ஒன்றியத்தினரால் இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
இன்றைய மாநாடு ஶ்ரீ ஜயவர்தனபுர பரகும்பா பிரிவேனாவில் நடைபெறவுள்ளதாக பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார்.
