9 ஆம் திகதியே தேர்தல் திகதி நிர்ணயம்!

உள்ளூராட்சித் தேர்தலின் செயற்பாடுகள் தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட தரப்பினருக்கு இன்று (07) அறிவிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தலுக்கு பணம் வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், அதை எப்படி நடத்துவதென்பது குறித்து நிதி அமைச்சின் செயலாளர், அரசாங்க தகவல் திணைக்களம் மற்றும் பிற தரப்பினருக்கு அறிவிக்கப்படவுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதேசமயம் உள்ளூராட்சித் தேர்தல் திகதியும் இன்று (07) அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டாலும், நாளை மறுதினம் வியாழக்கிழமையே திகதி அறிவிக்கப்படலாம் என தெரியவருகின்றது.

Related Articles

Latest Articles