9 மணி நேரம் நடந்த இஷாலினியின் பிரேத பரிசோதனை! உடல் பாகங்கள் இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு..

ரிஷாட் பதியூதீன் எம்.பியின் வீட்டில் பணிபுரிந்து வந்த நிலையில், தீயில் எரிந்து மரணமான இஷாலினியின் இரண்டாவது பிரதே பரிசோதனை, இன்று பேராதனை வைத்தியசாலையில் 9 மணி நேரம் நடந்துள்ளது.

டயகமவில் புதைக்ப்பட்ட இஷாலினியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் பேராதனை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இதனையடுத்து இன்று காலை 8.30 மணியளவில் ஆரம்பமான இரண்டாவது மரண பரிசோதனைகள் மாலை 5 மணி வரை நீடித்துள்ளது.

சுமார் 9 மணி நேரம் நீடித்த இந்த பரிசோதனையின் போது உடல் CT ஸ்கேன் பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளது.

உடலின் உள்ளே, உள் காயங்கள் காணப்படுகின்றனவா?, எலும்புகள் முறிந்துள்ளனவா? என்பன தொடர்பில் CT ஸ்கேன் மூலம் ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன், உடல் பாகங்களில் சிலவற்றை இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கும் அனுப்பிவைத்துள்ளனர்.

மூன்று விசேட மருத்துவ நிபுணர்கள் கூட்டாக இணைந்து இந்த மரண பரிசோதனையை நடத்தியுள்ளனர்.

இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்தின் அறிக்கை கிடைத்த பின்னர் முழுமையான அறிக்கையை பிரேத பரிசோதனை மருத்துவர்கள் சமர்ப்பிக்கவுள்ளனர்.

அதுவரை இஷாலினியின் உடல் பேராதனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Paid Ad
Previous articleதடுப்பூசி அட்டை இல்லையெனில், பேருந்துகளில் இரட்டை கட்டணமா?
Next articleஹிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி ஹோப் தோட்டத்தில் போராட்டம்