மலையக தொழிலாளர் முன்னணியின் பொதுச்செயலாளராக புஸ்பா விஸ்வநாதன் நியமனம்

மலையக மக்கள் முன்னணியின் தொழிற்சங்க பிரிவான மலையக தொழிலாளர் முன்னணியின் பொதுச்செயலாளராக புஸ்பா விஸ்வநாதன் பதவியேற்றுள்ளார்.

மலையக மக்கள் முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற நிர்வாக சபை கூட்டத்தொடரின் போது ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டதோடு தொடர்ந்து நேற்று இடம்பெற்ற மலையக மக்கள் முன்னணியின் பேராளர் மாநாட்டின் போது பதவி வழங்கப்பட்டது.

க.சுப்ரமணியம் மலையக தொழிலாளர் முன்னணியின் பொதுச்செயலாளராக காணப்பட்ட நிலையில் அவரை மலையக தொழிலாளர் முன்னணியின் தவிசாளராக பதவி வழங்கப்பட்டு புதிய பொதுச்செயலாளராக புஸ்பா விஸ்வநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மலையக மக்கள் முன்னணியுடன் 30 வருட காலம் பயணித்தமையினாலும் கட்சியின் வளர்ச்சிக்காக தொடர்ச்சியாக பாடுபட்டு வருவதினாலும் மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக தொழிலாளர் முன்னணியின் நிர்வாக சபை உறுப்பினரால் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தகவல் : நீலமேகம் பிரசாந்த்

Related Articles

Latest Articles