ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க நாளை இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார்.
“உலகலாவிய விசேட முன்னேற்றங்கள்” குறித்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே அவர் டில்லி செல்கின்றார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரதம விருந்தினராக பங்கேற்கவுள்ள இந்த கலந்துரையாடலில் கனடாவின் முன்னாள் பிரதமர் ஸ்டீவன் ஹாபர், ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் டோனி எபொட் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.
இம்மாநாட்டில் தென்னாசியா தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க சிறப்புரையாற்றவுள்ளார் என தெரியவருகின்றது. இவ்விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடலில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.










