மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கை 133 ஆவது இடத்தில்!

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் பின்லாந்து, டென்மார்க் மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் முதல் 3 இடங்களை தக்கவைத்துக்கொண்டுள்ளன. இந்த பட்டியலில் இலங்கை 133 ஆவது இடத்தில் உள்ளது.

ஐ.நா. ஆதரவுடன் ஆண்டுதோறும் உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் வெளியிடப்படுகிறது. ஒவ்வொரு நாட்டிலும் தனிநபர் வருவாய், சமூக ஆதரவு, சுகாதாரம் உட்பட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்படுகிறது.
அதன்படி இந்த ஆண்டு உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல வெளியிடப்பட்டது.

இந்தப் பட்டியலில் பின்லாந்து, டென்மார்க், ஐஸ்லாந்து, சுவீடன், நெதர்லாந்து ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன. மொத்தம் 143 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில், தலிபான்கள் நிர்வாகத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தில் உள்ளது.
போர் காரணமாக இஸ்ரேல் 8 ஆவது இடத்தில் உள்ளது.

ஆஸ்திரேலியா 11 ஆவது இடத்திலும், நியூசிலாந்து 12 ஆவது இடத்திலும் உள்ளன. பிரிட்டன் 23 ஆவது இடத்திலும், அமெரிக்கா 24 -வது இடத்திலும் உள்ளன.

Related Articles

Latest Articles