பேரிடர் நிவாரணத்தில் மலையகத் தமிழருக்கு எதிராக இன ஒதுக்கல்!

‘‘டித்வா பேரழிவுக்குப் பிந்தைய நிவாரணம் மற்றும் மீள்குடியேற்றத் திட்டங்களில், மலையகப் பெருந்தோட்ட சமூகத்தை, இன்றைய அரசாங்கம் ஒதுக்கி வைத் துள்ளது. இது திட்டமிட்ட இன ஒதுக்கல். எமது மக்கள் மீது பொறுப்பு ஐ.நா. சபைக்கு இருக்கின்றது. ஆகவே எங்கள் இந்த குற்றச்சாட்டை ஐ.நா. சபை விசேட கவனத்தில் எடுக்க வேண்டும்.”

– இவ்வாறு இலங்கையில் உள்ள ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி ஒருங்கிணைப்பாளர் மார்க அந்ரே பிரான்சேவைச் சந்தித்து, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

‘‘இலங்கை அரசாங்கத்தின், இடர் நிவாரண நிலையத்தின் மீள் கட்டுமான திட்டங்களின் கீழ், டித்வா பேரழிவில் பாதிப்புக்கு உள்ளான மலையகப் பெருந் தோட்ட மக்களுக்கு இடமில்லை. அவர் களை நாம் இந்திய வீடமைப்பு திட்டத்தின் கீழ்தான் வைத்துள்ளோம் என அத்தி யாவசிய சேவைகள் ஆணையாளர்- நாயகம் பகிரங்கமாக இலங்கையின் ஒரு முன்னணி ஊடகத்துக்கு கூறி யுள்ளார்.

இடர் நிவாரண நிலையத்தின் மீள் கட்டுமான, வீடமைப்பு திட்டத்தில், ஒவ் வொரு வீடும் அதிகபட்சமாக ரூபா. 50 இலட்சத்தில் வீடுகள் கட்டப்படும் உரிய காணிகள் இல்லாதோருக்கு காணிகள் வழங்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இந்தத் திட்டத்தை அனுராதபுரத்தில் ஆரம்பித்து வைக்கும் போது, அறிவித்தார்.

அதேவேளை இந்தத் திட்டத்தில், மலையக தமிழ் மக்களுக்கு இடமில்லை என ஜனாதிபதியால் விசேட மாக, அத்தியாவசிய சேவைகள் ஆணை யாளர் நாயகமாக நியமிக்க பட்டுள்ள பிரபாத் சந்திரகீர்த்தி கூறுகின்றார்.

மலையகத் தமிழர்கள் இந்நாட்டு குடிமக்கள் இல்லையா? அவர்கள் என்ன, இந்திய பிரஜைகளா? இலங்கையின் ஏனைய மக்களுக்கு, இடர் நிவாரண நிலையத்தின் மீள் கட்டுமானத்தில் வழங்கப்படும்,

உரிமைகள், கொடுப்ப னவுகள் என்ற அரசாங்க கவனிப்புகள், ஏன் எமது மக்களுக்கு வழங்க படமுடி யாது? ஆகவே இது எமது மக்களை மாற்றான் தாய் பிள்ளைகள் போன்று, இரண்டாம் தரப் பிரஜைகள் போன்று, நடத்தப்படும் இன ஒதுக்கல் இல்லையா? இதைக் கவனத்தில் எடுங்கள்.” – என்றும் ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி ஒருங்கிணைப் பாளரிடம் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவ லகத்தில், ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி ஒருங்கிணைப்பாளர் மார்க் அந்ரே பிரான்சேக்கும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணே சனுக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது, ஜனநாயக மக்கள் முன்னணியின் சர்வதேச விவ காரங்களுக்குப் பொறுப்பான இணைத் தலைவரும் த.மு.கூ. அரசியல் குழு உறுப்பினருமான பாரத் அருள்சாமியும் கலந்துகொண்டார். இந்தச் சந்திப்பு தொடர்பில் மனோ கணேசன்,

தனது எக்ஸ் தளத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-
“இடம்பெயர்ந்த ஒவ்வொரு குடும்பத் திற்கும் வழங்கப்பட வேண்டிய 50 இலட்சம் ரூபா வீடமைப்பு நிதியுதவியும், காணி ஒதுக்கீடும், பெருந்தோட்ட சமூகத்திற்கு மறுக்கப்பட்டு வருகின்றது. இது கவனயீனம் அல்ல. இது திட்டமிட்ட பாகுபாடு ஆகும். மலையக தமிழர்கள் மீது காட்டப்படும் இந்த “அபார்தெய்ட்” என்ற இன ஒதுக்கல் முடிவுக்கு வர வேண்டும்.

டித்வா பேரழிவுக்குப் பிந்தைய நிவா ரணம் மற்றும் மீள்குடியேற்றத் திட்டங்க ளில் எங்கள் சமூகத்தை விலக்கி வைக் கும் நிலையை விளக்குவதற்காக ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் அந்ரே பிரான்சேவிடம் நாம் தெரிவித்த எங்களது அவசர நிலைப்பாடுகள்:  டித்வா பேரழிவால் இடம்பெயர்ந்த அனைத்து மலையகக் குடும்பங்களும், தேசிய பேரிடர் முகாமைத்துவ மையத்தின் கீழ் செயல்படும் ஜனாதிபதியின் ரூபா 50 இலட்ச வீடமைப்பு, மற்றும் காணி வழங்கல் திட்டத்தில் உள்வாங்க பட வேண்டும். பெருந்தோட்ட காணிகளின் உரிமையாளர் அரசாங்கமாகும்.

அங்கே பெருந்தோட்ட நிறுவனங்கள் நீண்டகால குத்தகைக்கே காணி நிலத்தை பயன் படுத்துகின்றன. ஆகவே பெருந்தோட் டங்களில் பாதுகாப்பான காணிகளை, அடையாளம் கண்டு, அவற்றை மலையக மக்களுக்கு பிரித்து கொடுக்க, அரசாங் கத்துக்கு சட்டப்படி அதிகாரம் உண்டு. காணிகளை தந்து, வீடமைத்து தந்து, பாதிக்க பட்ட மலையக மக்களுக்கும், நாட்டின் ஏனைய மக்களுக்கு சமானமான அந்தஸ்தை தரும் கடப்பாடு இலங்கை அரசாங்கத்துக்கு உண்டு.

இதில் சட்ட தடைகள் எதுவும் இல்லை. அவசரச் சட் டங்கள் நிலம் கைப்பற்ற அனுமதிக்கின் றன. தோட்ட நிலங்கள் அரசின் நிலங் களே. நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் கீழ் நிரந்தரத் தீர்வுகள் உள்ளன.

ரூபா 27 இலட்சம் பெறுமதியான, இந்திய அரசின் உதவி வீடமைப்பு திட்டம் தனியாகவே தொடர வேண்டும். இலங்கைப் பிரஜைகளான மலையகத் தமிழர்களுக்கான இலங்கை அரசின் பொறுப்புக்கு மாற்றாக, இந்திய அரசின் உதவி வீடமைப்பு திட்டம் அமைய முடி யாது. டித்வா வீடமைப்பு திட்டம் என்பது, இலங்கை அரசின் இடர் நிவாரண விசேட அவசர திட்டமாகும். இந்திய அரசின் உதவி வீடமைப்பு திட்டம், பேரழிவு நிகழாத பிரதேசங்களில், வழமை போல், பெருந்தோட்ட தனி வீட்டு திட்டமாக தொடர வேண்டும்.

இலங்கையில் உள்ள இந்திய தூதரகமும் எமது நிலைப்பாட்டுக்கு சமா னமான நிலைப்பாட்டை கொண்டுள்ளது.

நில உரிமை, நிலத்துடன் கொண் டுள்ள சமூக பிணைப்பு, மற்றும் பாதுகாப்பு காரணங்களால், பெருந்தோட்டங்களில் தொடர்மாடி குடியிருப்புகளை கட்டி, நமது மக்களுக்கு வழங்கும் அரசாங்க யோச னையை நாம் ஒருபோதும் ஏற்று கொள்ள மாட்டோம். மலையக மக்களை ஒதுக்கி வைக்கும் கொள்கை “அபார்தைட்” என்ற இன ஒதுக்கல் ஆகும். தித்வா மீள்கட்டமைப்பு, பாதிக்க பட்ட இலங்கை மக்கள் அனை வரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அதற்காகவே உலக நாடுகள், மற்றும் இலங்கையின் உலகளாவிய அபிவிருத்தி பங்காளிகள், மற்றும் ஐ. நா. ஆகியவை இலங்கை அரசாங்கத் துக்கு உதவுகின்றன. ஆகவே இலங்கை அரசின் மலையக மக்களை ஒதுக்கி வைக்கும் இந்த கொள்கையை, ஐ.நா. தலையிட்டு உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என் றுள்ளது

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles