ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 61 ஆவது கூட்டத்தொடர் இன்று (23) ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது.
எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இம் மாநாட்டில் உலகளாவிய மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் மதிப்பீடு செய்யப்படவுள்ளது.
குறிப்பாக இலங்கை மனித உரிமை நிலைவரம் மற்றும் பொறுப்புகூறல் பற்றியும் ஜெனிவா மாநாட்டில் அவதானம் செலுத்தப்படவுள்ளது.
ஜெனிவாவுக்கான இலங்கையின் வதிவிட பிரதிநிதி தலைமையிலான குழு மாநாட்டில் பங்கேற்கவுள்ளது.
