இலங்கைக்கு கடந்த 22 நாட்களுக்குள் மாத்திரம் 2 லட்சத்து 28 ஆயிரத்து 424 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
பெப்ரவரி 1 முதல் 22 வரையான காலப்பகுதியிலேயே இவ்வாறு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி காலப்பகுதிக்குள் இந்தியாவில் இருந்து 37 ஆயிரத்து 216 பேரும், பிரிட்டனில் இருந்து 25 ஆயிரத்து 867 பேரும், ரஷ்யாவில் இருந்து 18 ஆயிரத்து 217 பேரும் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.
இலங்கையின் பொருளாதாரத்துக்கு சுற்றுலாத்துறை பெரும் பங்களிப்பு வழங்கிவருகின்றது.
கடந்த வருடம் 23 லட்சத்து 62 ஆயிரத்து 521 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதிக்குள் 5 லட்சத்து 5 ஆயிரத்து 751 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.










