ஈரான் தனித்துவிடப்படவில்லை: ரஷ்யாவுக்கு நன்றி தெரிவிப்பு!

ரஷ்யாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடினை இன்று (27) சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

இதன்போது ஈரானுக்கு ரஷ்யா வழங்கிவரும் உறுதியான தொடர் ஆதரவிற்கு அரக்ச்சி நன்றி தெரிவித்தார்.

சர்வதேச அரங்கில் ஈரான் தனித்து விடப்படவில்லை என்பதையும், தங்களுக்கு நம்பகமான நண்பர்கள் இருப்பதையும் ரஷ்யாவுடனான உறவு உலகிற்கு நிரூபிப்பதாகவும் கூறியுள்ளார்.

அதேவேளை, ஈரான் வெளிவிவகார அமைச்சரின் ரஷ்ய விஜயம் தொடர்பில் அமெரிக்கா தனது கழுகுப்பார்வையை செலுத்தியுள்ளது.

Related Articles

Latest Articles