இஸ்ரேலை பிராந்தியத்தின் ஆபத்தான புற்றுநோய் என்று குறிப்பிட்டுள்ள ஈரானின் உச்ச தலைவர் Mojtaba Khamenei, அந்த நாடு எதிர்காலத்தில் வேரோடு அழிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
ஹஜ் மற்றும் ஈத் அல்-அதா பண்டிகையை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு சூளுரைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக முழக்கங்களை எழுப்புவது இந்த ஆண்டு இஸ்லாமிய சமூகத்தின் முக்கிய கடமையாக இருக்கும் என்று Mojtaba Khamenei குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இஸ்லாமிய நாகரிகமே உலகை ஆளும் என்றும், எதிரிகளுக்கு எதிராக ஈரான் கடுமையான பதிலடியை வழங்கும் என்றும் அவர் தனது உரையில் வலியுறுத்தியுள்ளார்.
ஈரான் உச்ச தலைவரின் இந்த அறிவிப்பானது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரிப்பதாக அமைந்துள்ளது.










