ஈரானில் அமெரிக்கா மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளை “மிகப்பெரிய வெற்றி” என்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்க்கோ ரூபியோ நியாயப்படுத்தியுள்ளார்.
“ஆபரேஷன் எபிக் பியூரி (Operation Epic Fury) – உங்களில் சிலருக்கு இது பிடிக்காமல் இருக்கலாம், சிலருக்கு பிடித்திருக்கலாம் . ஆனால் அது தனது இராணுவ இலக்குகளை அடைவதில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
ஈரானின் பாதுகாப்பு-தொழில்துறை கட்டமைப்பை வியத்தகு முறையில் வீழ்த்துவதே இதன் முக்கிய நோக்கமாக இருந்தது.
இன்று, ஈரான் என்று ஒரு கடற்படையே கிடையாது. அப்படி ஒன்று இப்போது இல்லை. அது கடலின் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கிறது,” என்று மார்க்கோ ரூபியோ கூறினார்.










