ஆட்சி மாற்றம் குறித்து கனவு காணும் பொருளாதாரக் கொளையாளிகள்!

“ராஜபக்சக்கள் பொருளாதாரக் கொலையாளிகள். அந்த பொருளாதாரக் கொலையாளிகளால்தான் சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டி ஏற்பட்டது.” என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“கடந்தகால ஆட்சியாளர்கள் நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டுசென்றதால்தான் சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்லவேண்டியேற்பட்டது. மாறாக இலங்கை வலிந்து ஐ.எம்.எப்பை நாடவில்லை.

ராஜபக்சக்கள் பொருளாதாரக் கொலையாளிகள். உயர்நீதமன்றமும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இது எமது ஆட்சியில் வழங்கப்பட்ட தீர்மானமும் அல்ல. பொருளாதாரத்தை முறையாக நிவர்த்தி செய்ய முடியாத இந்த ஆட்சியில் இருந்த, பாம்புகடி கதையெல்லாம் கூறியவர்தான் இன்று பொருளாதாரம் பற்றி கதைக்கின்றார்.

பொருளாதாரக் கொலையாளிகள் கனவில் இருந்து எழுந்ததுபோல தற்போது கதைக்கின்றனர். இந்த பொருளாதாரக் கொளையாளிகளால்தான் ஐ.எம்.எவ். செல்ல நேரிட்டது. இவர்கள்தான் இன்று ஹெக்கர்கள் பற்றி கதைக்கின்றனர்.

ஐந்து தேங்காய் மரங்களுக்கிடையில் கூட்டமொன்றை நடத்திவிட்டு, ஆட்சி கவிழ்ப்பு பற்றி கதைக்கின்றனர். கனவு காண்கின்றனர். பொருளாதாரக் கொலையாளிகளுக்கு மக்கள் மீண்டும் ஆணை வழங்குவார்களா? ” – என்றார்.

Related Articles

Latest Articles