அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானின் எண்ணெய் வளங்களை இலக்கு வைக்கப்போவதாக விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்கா ஒரு முடிவற்ற சிக்கலில் சிக்க நேரிடும் என ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் எச்சரித்துள்ளார்.
ஈரானின் மீதான தவறான வியூகங்கள் உலகளாவிய எரிசக்தி சந்தைகளை நிலைகுலையச் செய்யும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்காவின் இத்தகைய ஆவேசமான முடிவுகள் பிராந்தியத்தில் மோசமான மாற்றங்களை உருவாக்கி, அவர்களை பல ஆண்டுகளாக ஒரு மீளமுடியாத துயரத்தில் தள்ளிவிடும் என்று ஈரான் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த இக்கட்டான சூழலில், தங்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்கா புதியதொரு ஈரானைக் காண நேரிடும் என்று காலிபாப் தனது அறிக்கையில் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.










