அமைதி ஒப்பந்தம் இறுதி கட்டத்தில்: ஈரானும் பச்சைக்கொடி!

போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும், இதில் ஹார்முஸ் நீரிணை பகுதியை மீண்டும் திறப்பதும் அடங்கும் என்றும் ஈரான் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஈரானிய அரசுத் தொலைக்காட்சியிடம் கருத்து வெளியிட்ட அவர், இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார முற்றுகை நீக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

அமெரிக்க அதிகாரிகளும் இந்த ஒப்பந்தத்தின் சில விவரங்களை உறுதிப்படுத்தியுள்ளனர்.

எனினும், ஈரானுக்கான பொருளாதார நன்மைகள், தெஹ்ரான் தனது கடமைகளை எவ்வாறு நிறைவேற்றுகிறது என்பதைப் பொறுத்தே அமையும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களுடன் இந்தப் போர் தொடங்கியது.

இதற்குப் பதிலடியாக ஈரான், இஸ்ரேல் மற்றும் வளைகுடாப் பகுதியில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது தாக்குதல் நடத்தியதுடன், உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) போக்குவரத்துக்கான முக்கிய கடல் வழித்தடமான ஹார்முஸ் நீரிணையையும் முற்றிலுமாக மூடியது.

கடந்த ஏப்ரல் மாதம் இரு நாடுகளும் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்ட போதிலும், அமெரிக்காவும் ஈரானும் அவ்வப்போது ஏவுகணைத் தாக்குதல்களில் ஈடுபட்டு வந்தன.

இந்த வாரத்தில் கூட இரு தரப்பிலும் பரஸ்பர தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில், பேச்சுவார்த்தையாளர்கள் “மிகச்சிறந்த ஒரு உடன்பாட்டை” எட்டியுள்ளதால், ஈரானுக்கு எதிராகத் திட்டமிடப்பட்டிருந்த தாக்குதல்களை தான் ரத்து செய்துள்ளதாக டொனால்ட் டிரம்ப் கடந்த வியாழக்கிழமை தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தம் மிக விரைவில் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வெள்ளிக்கிழமை அன்று, ஈரானிய ஊடகங்கள் 14 அம்சங்களைக் கொண்டதாகக் கூறப்படும் இந்த ஒப்பந்தத்தின் சில விவரங்களை வெளியிட்டன.

ஆனால், இந்த விவரங்களுக்கும் ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்ட விதிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், இது உண்மைக்கு புறம்பானது என்றும் டிரம்ப் மறுத்தார்.

சில மணி நேரங்களுக்குப் பிறகு, இந்த ஒப்பந்தத்திற்கு நடுவராகச் செயல்பட்டு உதவிய பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்டுவிட்டதாகவும், தற்போது இறுதி வடிவம் பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles