அணு ஆயுத திட்டத்தை கைவிட்டால் மட்டுமே ஈரானுக்கு பொருளாதார பயன் கிட்டும்!

ஈரான் தனது அணு ஆயுதத் திட்டத்தைக் கைவிட்டு, தீவிரவாதத்திற்கான நிதி உதவியை நிறுத்தினால் மட்டுமே அந்த நாட்டிற்குப் பொருளாதாரப் பயன்கள் கிடைக்கும் என்று அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் தெரிவித்தார்.

ஹார்முஸ் நீரிணையை திறந்து வைப்பதன் மூலமும், ஈரான் தனது நடவடிக்கைகளை மாற்றிக்கொள்வதன் மூலமும் இந்த உடன்படிக்கை வெற்றிபெறும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஒருவேளை ஈரான் தனது போக்கை மாற்றத் தவறினால், எந்தச் சலுகைகளும் வழங்கப்படாது என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

நிபந்தனைகளை ஈரான் பின்பற்றினாலும் இல்லாவிட்டாலும், இந்த ஒப்பந்தம் அமெரிக்காவிற்கே வெற்றியைத் தரும் என்று ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பாதுகாப்பையும் சர்வதேச அமைதியையும் உறுதி செய்வதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது.

Related Articles

Latest Articles