அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து: பாகிஸ்தான் அறிவிப்பு

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம் மின்னணு முறையில் கையெழுத்திடப்பட்டுள்ளது என பாக்கிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து X தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

” இரு நாடுகளின் தலைவர்களும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதுடன், மத்தியஸ்தர் என்ற முறையில் என்னாலும் இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளின் அரசாங்கங்களின் மிக உயர்ந்த மட்டத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பது, மோதலுக்கு இராஜதந்திர ரீதியில் தீர்வு காண்பதில் இரு தரப்பினருக்கும் உள்ள அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.” – எனக் கூறப்பட்டுள்ளது.

“இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம் உடனடியாக நடைமுறைக்கு வரும். இதன் முதற்கட்டமாக, ஈரான் ஹார்முஸ் நீரிணைய உடனடியாக மீண்டும் திறக்கும். அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையை உடனடியாக வாபஸ் பெறும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இணை மத்தியஸ்தராகச் செயல்படும் கத்தார் நாட்டின் ஆதரவுடன், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைக் கொண்டாடுவதற்கும், தொழில்நுட்ப ரீதியிலான பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கும் திட்டமிட்டபடி 2026 ஜூன் 19 அன்று சுவிட்சர்லாந்தில் உத்தியோகபூர்வ விழாவை பாக்கிஸ்தான் நடத்தும்.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒட்டுமொத்த பிராந்தியத்தின் சிறந்த புரிதல், பரஸ்பர மரியாதை மற்றும் பகிரப்பட்ட செழுமை ஆகியவற்றிற்கு ஒரு நிலையான அடித்தளமாக அமையட்டும்” என்றும் பாகிஸ்தான் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles