விஜய் அலையை எதிர்கொள்ள சீமானை பொது வேட்பாளராக களமிறக்க திமுக வியூகம்?

தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்​தேர்​தலில் அம்​பாச​முத்​திரம் தொகு​தி​யில் தவெகவை எதிர்​கொள்ள, நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமானை எதிர்க்​கட்​சிகளின் பொது​வேட்​பாள​ராக களம் இறக்க திமுக திட்​ட​மிட்டு வருகிறது.இந்து தமிழிசை இணையத்தளம் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது.

குறித்த செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது,

சட்​டப்​பேரவை தேர்​தலில் தனித்து களம் கண்ட நாம் தமிழர் கட்​சி, அனைத்து இடங்​களி​லும் தோல்​வியைச் சந்​தித்​ததுடன் அதன் வாக்கு வங்​கி​யும் 8 சதவீதத்​திலிருந்து 4 சதவீத​மாகக் குறைந்​தது.

காரைக்​குடி​யில் போட்​டி​யிட்ட அக்​கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமானும் கட்டுப்பணம் இழந்து நான்​காம் இடத்​துக்கு தள்​ளப்​பட்​டார்.

இந்நிலையில், இரு தொகு​தி​களில் வென்ற முதல்​வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி பதவியை ராஜி​னாமா செய்​துள்​ளார்.

இதனால் திருச்சி கிழக்​கு, பெருந்​துறை, தாராபுரம், மது​ராந்​தகம், அம்​பாச​முத்​திரம், விராலிமலை ஆகிய 6 தொகு​தி​களுக்கு தற்​போது இடைத்​தேர்​தல் அறிவிக்​கப்​படும் சூழல் உரு​வாகி​யுள்​ளது.

இந்த இடைத்​தேர்​தலில் தவெக கூட்​ட​ணியை வீழ்த்​தியே தீர வேண்​டும் என்ற முனைப்​பில் இருக்​கும் திமுக, ஆளுங்​கட்​சிக்கு எதி​ராக அனைத்து எதிர்க்​கட்​சிகளை​யும் ஒன்​றிணைத்து பொது வேட்​பாளர்​களை நிறுத்த ஆலோ​சித்து வரு​கிறது.

இதன் முதல்​கட்​ட​மாக நெல்லை மாவட்​டத்​தின் அம்​பாச​முத்​திரம் தொகு​தி​யில் பணி​களை தொடங்​கி​யுள்​ளது.

கடந்த தேர்​தலில் அம்​பாச​முத்​திரத்​தில் அதி​முக சார்​பில் வென்ற இசக்கி சுப்​பை​யா, இரண்​டாம் இடம் பிடித்த காங்​கிரஸ் வேட்​பாளர் மற்​றும் மூன்​றாம் இடம்​பிடித்த தவெக வேட்​பாளர் என மூவருமே தற்​போது தவெக அணி​யில் உள்​ளனர்.

மேலும், இத்​தொகு​தி​யில் நாடார் சமூகத்​தினர் கணிச​மாக வசிப்​ப​தைக் கணக்​கில் கொண்​டு, அதே சமூகத்​தைச் சேர்ந்த சீமானை பொது​வேட்​பாள​ராக நிறுத்த திமுக காய் நகர்த்தி வரு​கிறது.

சீமானை சம்​ம​திக்க வைக்​கும் பொறுப்பு முன்​னாள் அமைச்​சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் வழங்​கப்​பட்​டுள்​ள​தாக​வும், இது தொடர்​பாக அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி​யிட​மும் திரைமறைவு பேச்​சு​வார்த்​தைகள் நடந்து வரு​வ​தாக​வும் தகவல்​கள் கசிந்​துள்​ளன.

அம்​பாச​முத்​திரத்​தில் சீமானை வெற்றி பெறச்​செய்து சட்​டப்​பேர​வைக்​குள் அனுப்​பி​னால், அது முதல்​வர் விஜய்க்​கும், தவெக​வுக்​கும் சட்​டப்​பேர​வை​யில் கடுமை​யான அரசி​யல் நெருக்​கடியை கொடுக்​கும் எனவும், சட்​டப்​பேர​வை​யில் எதிர்க்​கட்​சிகளின் குரல் மேலும் வலுப்​பெறும் என திமுக கணக்கு போடு​வ​தாக கூறப்​படு​கிறது.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சி நிர்​வாகி​களிடம் பேசி​ய​போது, எங்​கள் தரப்​பில் யாரிட​மும் பேச்​சு​வார்த்தை எது​வும் இது​வரை நடத்​தப்​பட​வில்​லை. அடுத்த சில நாட்​களில் கட்​சி​யின் ஆலோ​சனை கூட்​டம் நடை​பெறவுள்​ளது. அதில் இதுபற்றி வி​வா​திக்​கப்​படலாம்​ எனத்​ தெரிவித்​தனர்​.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles