நாட்டில் சில பகுதிகளில் இன்று (29) மழை பெய்யும் என வளிமண்டளவில் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, வடமேல் ஆகிய மாகாணங்களிலும், காலி, மாத்தறை, குருணாகல் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேற்படி பகுதிகளில் சில இடங்களில் 50 மில்லி மீற்றர்வரை மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
