போர் நிறுத்தத்துக்கு அமெரிக்கா, ஈரான் இணக்கம்: அமைதி பேச்ச மீண்டும் ஆரம்பம்

ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே நிலவி வரும் பதற்றத்தைத் தணிக்கவும், ஹார்முஸ் நீரிணை தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கவும் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

போர் நிறுத்த ஒப்பந்தத்தைமீறி இரு நாடுகளும் கடந்த இரு நாட்களாக தாக்குதல்களில் ஈடுபட்டவந்த நிலையிலேயே, அமைதி பேச்சுக்கு ஒப்புக்கொண்டுள்ளன.

கடந்த சில நாட்களாக இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி வந்த நிலையில், தற்போது தற்காலிக போர்நிறுத்தத்தை அமுல்படுத்தவும் கப்பல் போக்குவரத்தை அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய போதிலும், கத்தாரில் புதிய பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளன.

அதே சமயம், லெபனானில் ஈரான் ஆதரவு குழுக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவது இந்த அமைதி ஒப்பந்தத்திற்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.

உலகளாவிய எரிசக்தி போக்குவரத்திற்கு முக்கியத்துவமான இந்த நீர்ச்சந்தியை மீண்டும் திறப்பதன் மூலம், பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் அபாயத்தை தவிர்க்க சர்வதேச சமூகம் முயற்சிக்கிறது.

இந்த இக்கட்டான சூழலில், இராஜதந்திர ரீதியில் தீர்வுகாண இரு நாடுகளும் மீண்டும் முன்வந்துள்ளன.

Related Articles

Latest Articles