உலகின் மிகச்சிறந்த தீவு சுற்றுலாத் தலமாக இலங்கை தேர்வு: உலகப் புகழ்பெற்ற தேயிலைத் தோட்டங்கள்

சர்வதேச சுற்றுலா இதழான ‘பிக் 7 டிராவல்’ (Big 7 Travel) வெளியிட்டுள்ள சமீபத்திய தரவரிசையின்படி, 2026 ஆம் ஆண்டில் மக்கள் பார்வையிடுவதற்கு உலகின் மிகச்சிறந்த தீவு சுற்றுலாத் தலமாக இலங்கை முதலிடத்தைப் பிடித்துள்ளது.

சுற்றுலா செல்ல வேண்டிய 50 சிறந்த தீவுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்தைப் பெற்றுள்ளது.

நாட்டின் 833 மைல் நீளமுள்ள கடற்கரை, அழகிய மத்திய மலைப்பகுதி, உலகப் புகழ்பெற்ற தேயிலைத் தோட்டங்கள், செழுமையான கலாச்சார பாரம்பரியம், வியக்கத்தக்க பல்லுயிர்ப் பெருக்கம் (biodiversity) ஆகியவையே இந்தத் தரவரிசையில் இலங்கை முதலிடம் பெறுவதற்குக் காரணமான முக்கிய காரணிகளாக அந்த இதழ் சுட்டிக்காட்டியுள்ளது.

யால தேசிய பூங்கா மற்றும் யுனெஸ்கோவினால் உலக பாரம்பரியத் தளமாக அறிவிக்கப்பட்டுள்ள சிகிரியா உள்ளிட்ட புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்கள், இலங்கை இந்த முதலிடத்தைப் பெறுவதில் முக்கிய பங்கு வகித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் சுற்றுலாத் துறைக்கு மேலும் வலுவூட்டும் வகையில், உலகின் 50 சிறந்த கடற்கரைகளின் பட்டியலில் உனவடுன (Unawatuna) கடற்கரை 26-வது இடத்தைப் பிடித்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles