வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமக் கந்தனின் வருடாந்த ஆடித்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று (25.07.2026) சனிக்கிழமை அதிகாலை முதலே நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்த ஆயிரக்கணக்கான அடியார்கள், கதிரமலையை (ஏழுமலை) நோக்கிப் பாதயாத்திரையாகவும், மலையேறியும் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஜூலை 15 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான இவ்வாண்டிற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமக் கந்தனின் உற்சவம், இன்று 10-வது நாளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இவ்விழாவைக் காண்பதற்காக இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பெருந்திரளான பக்தர்கள் கதிர்காமத்தில் குவிந்து வருகின்றனர்.
இத்திருவிழாவானது, எதிர்வரும் ஜூலை 29 ஆம் திகதி மாணிக்கக் கங்கையில் நடைபெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்த்தோற்சவத்துடன் இனிதே நிறைவுபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
பொகவந்தலாவ நிருபர் எஸ் சதீஸ்










