ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹர சிறைச்சாலை பகுதியிலுள்ள மூன்று கிராம சேவகர் பிரிவுகளுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு நீக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
246 கெந்தலியத்த பாலுவ – மேற்கு, 246 C கெந்தலியத்த பாலுவ – வடக்கு மற்றும் 181 G தம்புவ ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கே நேற்றிரவு பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது அது நீக்கப்பட்டுள்ளது.
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்டிருந்த பதற்ற நிலை இன்று முற்பகல் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.










