பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை 6 ஆண்டுகளாக வரையறுக்கத் திட்டம்

அரசாங்கம், பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை அதிகபட்சமாக ஆறு ஆண்டுகள் வரையறுக்க திட்டமிட்டுள்ளதாக ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அனைத்து நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை இரண்டு ஆண்டுகள் நீடிக்கும் நோக்கில், அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ள திருத்தங்களின் ஒரு பகுதியாக இது அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் பதவிக்கு அதிகபட்சமாக ஆறு ஆண்டுகள் பதவிக்காலத்தை நிர்ணயிக்கும் இந்த நடவடிக்கையினால், ஓய்வு பெறும் வயதை எட்டாவிட்டாலும் கூட, பிரதம நீதியரசர் ஆறு ஆண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்த பின்னர் பதவி விலக வேண்டும்.

முன்மொழியப்பட்ட திருத்தங்களின்படி, உயர்நீதிமன்ற நீதியரசரின் ஓய்வு பெறும் வயது 65இல் இருந்து 67 ஆகவும், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 63 இல் இருந்து 65 ஆகவும் உயர்த்தப்படும்.

மற்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதும் இரண்டு ஆண்டுகள் அதிகரிக்கப்படும்.

சட்டமா அதிபரின் ஒப்புதலுக்குப் பின்னர், அடுத்த மாத தொடக்கத்தில் இந்த முன்மொழியப்பட்ட திருத்தங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மூத்த அரசாங்க வட்டாரம் ஒன்று தெரிவித்துள்ளது.

இந்த முன்மொழிவுகள் ஏற்கனவே அரசாங்க சட்ட வரைவாளருக்கு அனுப்பப்பட்டுள்ளன.

நவம்பர் மாதம் வரவுசெலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் இந்தச் செயல்முறையை நிறைவு செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles