சீரற்ற காலநிலை: நுவரெலியா, கண்டியில் ஆறு பேர் பலி

அடை மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் ஐவரும், கண்டியில் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சீரற்ற காலநிலையால் மூவர் காயம் அடைந்துள்ளனர். இருவர் காணாமல்போயுள்ளனர்.

நாட்டில் நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி, கேகாலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலேயே பெருமளவு சேதம் ஏற்பட்டுள்ளது.

நுவரெலியா, கேகாலை ஆகிய மாவட்டங்களில் 9 தற்காலிக முகாம்களில் 1881 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

சீரற்ற காலநிலையால் 129 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.
இலங்கையில் மலையகம் உள்ளிட்ட பகுதிகளில் இன்றும் மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Articles

Latest Articles