டெங்கு அபாயம் நீங்கவில்லை: 3 நாட்களுள் 1,598 பேர் பாதிப்பு

நாட்டில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் 03 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 86 ஆயிரத்து 947 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இக்காலப்பகுதியில் டெங்கு நோயால் 62 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆகஸ்ட் மாதத்தில் கடந்துள்ள மூன்று நாட்களில் 1,598 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தில் மாத்திரம் 45, 976 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மத்திய மாகாணத்தில் 7,623 பேரும், சப்ரகமுவ மாகாணத்தில் 7,175 பேரும், ஊவா மாகாணத்தில் 2,416 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

 

 

 

Related Articles

Latest Articles