சீரற்ற காலநிலையால் நுவரெலியா மாவட்டத்தில் 1,438 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 445 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அறுவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர்.
ஒரு வீடு முழுமையாகவும், 115 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளது.
475 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 716 பேர் 32 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.










