லஞ்சப் பணத்தை ‘நேர்மையாக’ பிரிக்க கங்கை நீர்மீது சத்தியம்: அரசியல்வாதிகளின் நவீன கூத்து அம்பலம்

லஞ்சமாகக் கிடைக்கும் பணத்தைத் தங்களுக்குள் ‘நேர்மையாக’ப் பங்கிட்டுக் கொள்வதற்காக, உள்ளாட்சி கவுன்சிலர்கள் சிலர் புனிதமாகக் கருதப்படும் கங்கை நீரின் மீது சத்தியம் செய்து உறுதிமொழி எடுத்துக்கொண்ட சம்பவம் இந்தியா உத்தரப் பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்தியா உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாநகராட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்கள் சிலர் ஒன்று கூடி இந்தச் சத்தியப் பிரமாணத்தைச் செய்துள்ளனர்.

அந்த வீடியோவில், நபர் ஒருவர் போத்தலில் இருக்கும் கங்கை நீரை அங்கிருக்கும் மற்ற கவுன்சிலர்களின் கைகளில் ஊற்றுகிறார்.

அதைத் தொடர்ந்து, “மாநகராட்சிக்கு லஞ்சமாகக் கிடைக்கும் பணம் 60 கவுன்சிலர்களுக்கும் சமமாகப் பகிர்ந்து அளிக்கப்படும். நமது குழுவில் உள்ள யாருக்காவது பிரச்சினை ஏற்பட்டால், அனைவரும் ஒற்றுமையாக அவருக்கு ஆதரவாக நிற்போம்” என்று அவர் கூற, மற்றவர்களும் கையில் கங்கை நீரை ஏந்தியபடி அதை அப்படியே திருப்பிச் சொல்லி சத்தியம் செய்கின்றனர்.

மேலும், இந்த ஒப்பந்தத்தை மீறி நடப்பவரை ‘துரோகி’ என்றும் அந்த வீடியோவில் குறிப்பிடுகின்றனர். மக்கள் பிரதிநிதிகளே லஞ்சப் பணத்தைப் பிரிக்க புனித கங்கை நீரைப் பயன்படுத்தி சத்தியம் செய்துள்ள இந்த வீடியோ, அம்மாநில அரசியலில் பெரும் ஊழல் புயலைக் கிளப்பியுள்ளது.

மாநகராட்சி ஆணையர் விளக்கம்

இச்சம்பவம் குறித்து ஷாஜஹான்பூர் மாநகராட்சி ஆணையர் சவும்யா குருராணி அளிக்கையில், “இந்த வீடியோ கடந்த 2025 நவம்பர் மாதத்தில், முந்தைய மாநகராட்சி ஆணையர் பதவிக் காலத்தில் பதிவு செய்யப்பட்டதாக முதற்கட்டத் தகவல் கிடைத்துள்ளது.

இருப்பினும், விவகாரத்தின் தீவிரத்தைக் கருதி இது தொடர்பாக முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம். விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது கடுமையான அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles