பஸ் விபத்தில் ஒருவர் பலி: நால்வர் காயம்

மன்னார் – யாழ்ப்பாணம் ஏ – 32 பிரதான வீதியின் பள்ளமடு பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற சிறிய ரக பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.

முழங்காவில் பகுதியில் இருந்து தனியார் நிறுவனம் ஒன்றின் பணியாளர்களை ஏற்றி வந்த சிறிய ரக பஸ் ஒன்றே கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்து இடம்பெற்ற வேளையில் பஸ்ஸில் பயணித்த 20 பேரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். காயமடைந்த நான்கு பேர் உடனடியாக மீட்கப்பட்டு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Latest Articles