சிறையில் அடைப்பதாயின் மரண தண்டனை வேண்டும்: இல்லையேல் நானும் தலைவர் நாமலும் போராடுவோம்!

NPP அரசுக்கு ஆதரவாக மாத்தறையிலும் பேரணி!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசுக்கு மக்கள் வழங்கிய ஆணையைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி, ‘ஜனவரம புரவசியோ’ (மக்கள் ஆணைக்கான பிரஜைகள்) அமைப்பின் ஏற்பாட்டில் மாத்தறையில் மாபெரும் அமைதிப் பேரணி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

பௌத்த தேரர்களின் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

நாட்டில் நல்லாட்சியை நிலைநிறுத்தும் வகையிலும், அரசின் துணிச்சலான நடவடிக்கைகளுக்குச் சமூக ரீதியான வலுச்சேர்க்கும் வகையிலும் இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திருடர்கள், ஊழல்வாதிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் சட்ட நடவடிக்கைகளை எவ்விதத் தயக்கமுமின்றித் தொடர்ந்து தீவிரமாக முன்னெடுக்க வேண்டும் என்று பேரணியில் கலந்துகொண்ட மக்கள் வலியுறுத்தினர்.

………….

நாமல் எம்.பிக்கு மறியல் நீடிப்பு!

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான நிதி மோசடிக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன ஆகியோரை எதிர்வரும் நவம்பர் மாதம் 6ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, சந்தேகநபர்கள் இருவரையும் நவம்பர் 6ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

…………

கொட்டும் மழையிலும் 27ஆவது வாரமாக மயிலிட்டி மக்கள் போராட்டம்

மயிலிட்டி மக்களின் பூர்வீகக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டுவரும் தொடர் போராட்டம், கொட்டும் மழைக்கும் மத்தியிலும் இன்றும் 27ஆவது வாரமாகத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.தமது சொந்த நிலங்களுக்குத் திரும்பிச் செல்ல முடியாத துயரத்தையும், நீண்டகாலமாக அனுபவித்து வரும் அவலங்களையும் சுமந்துகொண்டு, மயிலிட்டி மக்கள் தமது உரிமைக்காகத் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர்.

மழை, வெயில் என இயற்கையின் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் போராட்டத்தைக் கைவிடாது தொடர்ந்துவரும் மக்கள், இன்று பெய்த கனமழைக்கு மத்தியிலும் தமது காணிகள் விடுவிக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

வாரங்கள் கடந்து மாதங்கள், வருடங்கள் என உருண்டோடும் நிலையிலும் தமது கோரிக்கைக்கு உரிய தீர்வு கிடைக்காமை மக்களிடையே பெரும் ஏமாற்றத்தையும் ஆதங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

“எமது பூர்வீக மண்ணில் வாழ்வதற்கும், எமது சொந்த இடங்களில் மீண்டும் குடியேறுவதற்கும் நாம் ஏன் இவ்வளவு காலம் போராட வேண்டியிருக்கின்றது?” என்று  போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வேதனையுடன் கேள்வி எழுப்பினர்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதுவுமே நடைமுறையில் நிறைவேற்றப்படவில்லை என்று போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் குற்றம் சாட்டினர்.

“அரசு கூறிய வாக்குறுதிகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, இப்போது மீண்டும் மீண்டும் கதைகளைச் சொல்லிக்கொண்டிருக்கின்றது. அவர்களின் இந்தத் தொடர்கதைகளைக் கேட்டுக்கொண்டிருக்க நாம் தயாராக இல்லை. எமக்குத் தேவை வெறும் வாக்குறுதிகள் அல்ல. எமது காணிகள் விடுவிக்கப்படுவதற்கான உறுதியான நடவடிக்கைகளே” என்று மக்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

காணி விடுவிப்பு என்பது வெறுமனே நிர்வாக ரீதியான ஒரு கோரிக்கை மட்டுமல்ல, அது மக்களின் வாழ்வுரிமை மற்றும் பூர்வீக மண்ணில் வாழ வேண்டும் என்ற அடிப்படை உரிமை என்பதை உணர்ந்து அரசு உடனடியாகச் செயற்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

……….

ரம்புக்கனை – பேராதனை – கம்பளை ரயில் சேவை இடைநிறுத்தம்

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ரம்புக்கனை மற்றும் பேராதனை ரயில் நிலையங்களுக்கு இடையில் அமைந்துள்ள கடிகமுவ ரயில் நிலையத்திற்கு அருகில் மண்சரிவு ஏற்பட்டு, ரயில் மார்க்கத்தில் மண் அடித்துச் செல்லப்படும் அபாயகரமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

அந்த அபாயகரமான சூழ்நிலையைத் தவிர்த்து, ரயில் மார்க்கத்தை சீரமைப்பதற்கான அவசரப் புனரமைப்புப் பணிகளை நாளை (24) மற்றும் நாளை மறுதினம் (25) ஆகிய இரு தினங்களில் மேற்கொள்வதற்கு ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

இந்த புனரமைப்புப் பணிகள் காரணமாக, குறிப்பிட்ட அந்த இரண்டு நாட்களிலும் ரம்புக்கனை – பேராதனை மற்றும் கம்பளை இடையிலான அனைத்து ரயில் சேவைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த இரண்டு நாட்களுக்காக பணம் செலுத்தி ஆசனங்களை முன்பதிவு செய்த பயணிகள், தாம் செலவழித்த முழுத் தொகையையும் எந்தவொரு ரயில் நிலையத்திலிருந்தும் மீண்டும் பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயில் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டதால் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு ரயில்வே திணைக்களம் தனது வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.

……….

சாமர சம்பத்துக்கு நவம்பர் 6 வரை விளக்கமறியல்

பொஸ்பேட் இறக்குமதி செய்யும் மூன்று நிறுவனங்களிடம் 84 இலட்சம் ரூபாவை இலஞ்சமாகக் கோரிப் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மற்றும் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவும், அவரது முன்னாள் செயலாளரும் எதிர்வரும் நவம்பர் மாதம் 6ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று (23) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு முன்வைத்த விடயங்களைக் கவனத்தில் கொண்ட நீதவான் இந்த உத்தரவை வழங்கியுள்ளார்.

பொஸ்பேட் இறக்குமதி செய்யும் மூன்று நிறுவனங்களிடம் 84 இலட்சம் ரூபாவை இலஞ்சமாகக் கோரிப் பெற்றதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

……….

போயா தினத்தில் விசேட பரிசு – போலி செய்திக்கு ஏமாற வேண்டாம்

வங்கியொன்றின் ஊடாக எதிர்வரும் பௌர்ணமி தினத்தில் விசேட பரிசில்கள் மற்றும் சலுகைகள் வழங்கவுள்ளதாக பரவும் போலி செய்திகள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு இலங்கை அவசர கணனி பதிலளிப்பு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

…………….

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் கல்லேல்லே சுமனசிறி தேரர் நியமனம்

 

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக மொலகொட, கொடமுதுன்கல ரஜமஹா விகாராதிபதி, அக்கமஹா பண்டித சிரேஷ்ட பேராசிரியர் கல்லேல்லே சுமனசிறி தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் வணக்கத்திற்குரிய கல்லேல்லே சுமனசிறி தேரரிடம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (23) முற்பகல் கையளிக்கப்பட்டது.

சிரேஷ்ட பேராசிரியர் கல்லேல்லே சுமனசிறி தேரர் இதற்கு முன்னர் இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழகம் ஆகியவற்றின் உபவேந்தராகப் பணியாற்றியுள்ளார். அவர் தனது முதன்மைப் பட்டமாக களனிப் பல்கலைக்கழகத்தில் பௌத்த தத்துவம் பற்றிய சிறப்புப் பட்டத்தைப் பயின்றுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து களனிப் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம், இந்தியாவின் டெல்லிப் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் உட்பட கலாநிதி பட்டத்தையும் பெற்றுள்ளார். இதற்கு மேலதிகமாக, பெய்ஜிங் பல்கலைக்கழகத்தில் சீன மொழி பற்றிய டிப்ளோமா கல்வியையும் பயின்றுள்ளார்.

………….

செம்மணி 4 ஆவது இடைக்கால அறிக்கை உண்மைகளை மூடி மறைக்கும் சதிச் செயல்

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி விசாரணை தொடர்பில் வெளிவந்துள்ள 4ஆவது இடைக்கால அறிக்கை முற்றிலும் திசைதிருப்பப்பட்டது என்றும், உண்மைகளை மூடி மறைக்கும் சதிச் செயல் என்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

செம்மணி விவகாரம் தொடர்பாக முன்னர் வெளியிடப்பட்ட அறிக்கைகளில் கூறப்பட்ட ஆய்வுகளை, 4ஆவது இடைக்கால அறிக்கை தலைகீழாக மாற்றி எழுதியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதுவரை கண்டெடுக்கப்பட்ட எச்சங்களில் பெரும்பாலானவை உடைகள் இன்றிப் புதைக்கப்பட்டுள்ளன என்று முன்னர் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இயற்கை அழுத்தம் காரணமாக உடைகளும் உடல்களும் கரைந்துபோயிருக்கலாம் எனப் புது விளக்கம் அளிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் மற்றும் சர்வதேச நிபுணர்கள், செம்மணி விசாரணைக்குப் போதிய நிதியும், தடயவியல் மற்றும் உடற்கூற்றியல் தொழில்நுட்ப வசதிகளும் இல்லை என்றும், சர்வதேச உதவிகள் அவசியம் என்றும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

செம்மணி விசாரணைகளைச் சர்வதேசப் பொறுப்புடன் முழுமையாக நடத்த அரசு தயங்குகின்றது என்றும், குற்றங்களைச் செய்துவிட்டு அதனை மூடிமறைக்க முற்படும் முந்தைய அரசுகளை விட இந்த அரசு வேறுபட்டதல்ல என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், செம்மணி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களும் நீதி கோருவோரும் இந்த அரசின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை முழுமையாக இழந்துவிட்டனர் என்றும் கஜேந்திரகுமார் எம்.பி. இந்த ஊடக சந்திப்பில் மேலும் தெரிவித்தார்.

………

“ எங்களை சிறையில் அடைப்பதாக இருந்தால் மரண தண்டனை வழங்கவும். அவ்வாறு இல்லாமல் உயிருடன் சிறையில்விட்டால் அங்கிருந்து நானும், எனது தலைவர் நாமலும் போராடுவோம்.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினரான திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்தார். 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles