மலையக உறவுகளை மண்தின்ற கொடூரம்: மீரியபெத்த மண்சரிவுக்கு 12 ஆண்டுகள்; இன்னும் தீராத வீடமைப்புப் பிரச்சினை!

2014ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி பதுளை மாவட்டம், கொஸ்லந்தை, மீரியபெத்த பகுதியில் இடம்பெற்ற பாரிய மண்சரிவு அனர்த்தம் நிகழ்ந்து இன்றுடன் (29) 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

இந்த அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களில் ஒரு பகுதியினருக்கு நிரந்தர வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ள போதிலும், எஞ்சிய சில குடும்பங்களுக்கு இதுவரை நிரந்தர வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோட்டத் தொழிலாளர் மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் இன்று (29) ஹப்புத்தளை நகரில் நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தின்போது, மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஏற்பாட்டாளர்கள் இவ்வாறு கருத்துத் தெரிவித்தனர்.

மண்சரிவு அனர்த்தம் இடம்பெற்று 12 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களுக்கும் நிரந்தர வீடுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முழுமையாக நிறைவுசெய்யப்படாமை கவலைக்குரிய விடயமாகும். இயற்கை அனர்த்தத்தால் தமது வீடுகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்த குடும்பங்கள், நிரந்தரக் குடியிருப்புகளை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன.

எனவே, எஞ்சிய குடும்பங்களின் நிலைமையைக் கருத்திற்கொண்டு, அவர்களுக்கும் நிரந்தர வீடுகளை அமைத்துக்கொடுக்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதேவேளை, இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையிலும், மலையக மக்களுக்கு முறையான காணி உரிமை, வீட்டுரிமை மற்றும் முழுமையான குடியுரிமைகள் கிடைக்காத நிலை தொடர்வதாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டினர்.

தேர்தல் காலங்களில் மாத்திரம் வாக்குறுதிகள் வழங்கப்படுவதாகவும், தேர்தலுக்குப் பின்னர் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படுவதில்லை என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

குறிப்பாக, திவா சூறாவளி உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட ஹப்புத்தளை, வெரகலையகம், கல்பத்தென்ன, மீரியபெத்த உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்தும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மழைக்காலங்களில் பாதுகாப்புக் காரணங்களுக்காகத் தமது வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் மக்கள், மழை குறைந்ததும் மீண்டும் ஆபத்தான நிலையிலுள்ள வீடுகளுக்குத் திரும்ப வேண்டிய அவலநிலை தொடர்வதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இந்நிலையில், கொஸ்லந்தை, மீரியபெத்த மண்சரிவு அனர்த்தத்தின் 12ஆவது ஆண்டு நிறைவையொட்டி, பாதிக்கப்பட்ட மக்களின் காணி உரிமை, வீட்டுரிமை மற்றும் ஏனைய அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி ஹப்புத்தளை நகரில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, “கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்”, “பாதிக்கப்பட்ட மக்களுக்கு காணி உரிமையை வழங்குங்கள்”, “நிரந்தர வீடுகளை அமைத்துக்கொடுங்கள்” போன்ற கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டக்காரர்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.

தேர்தலுக்கு முன்னர் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைய, காணி உரிமை, வீட்டுரிமை மற்றும் சிவில் உரிமைகளை உடனடியாக உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

மேலும், மலையக மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் வரை தமது கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தைத் தோட்டத் தொழிலாளர் மத்திய நிலையம் ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மீரியபெத்த மண்சரிவு அனர்த்தம் நிகழ்ந்து 12 ஆண்டுகள் கடந்தும், பாதிக்கப்பட்ட எஞ்சிய குடும்பங்களின் வீடமைப்புப் பிரச்சினைக்கும் மலையக மக்களின் காணி மற்றும் வீட்டுரிமைப் பிரச்சினைகளுக்கும் எப்போது நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்பதே தற்போது எழுந்துள்ள முக்கிய கேள்வியாகும்.

பதுளை (தெமோதரை நிருபர் – சுரேஷ்ராஜரத்தினம்)

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles