வர்த்தக அமைச்சின் தலையீட்டைத் தொடர்ந்து, நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் லாப்ஸ் (LAUGFS) சமையல் எரிவாயு விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
இதன்படி, 12.5 கிலோ எடையுடைய லாப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 6,740 ரூபாவிலிருந்து 5,995 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 745 ரூபா விலைக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேவேளை, 5 கிலோ எடையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 2,720 ரூபாவிலிருந்து 2,398 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, அதன் விலையில் 322 ரூபா குறைக்கப்பட்டுள்ளது.
வர்த்தக அமைச்சின் தலையீட்டின் பின்னரே இந்த விலைக்குறைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த விலைக்குறைப்பு லாப்ஸ் சமையல் எரிவாயு பாவனையாளர்களுக்கு நிவாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.










