காவத்தை நகரில் அத்தியாவசிய வர்த்தக நிலையங்களை தவிர ஏனைய சகல வர்த்தக நிலையங்களும் இன்று முதல் பூட்டப்படவுள்ளன.
கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணத்தால் காவத்தை நகரிலுள்ள அத்தியாவசிய வர்த்தக நிலையங்ளை தவிர ஏனைய சகல வர்த்தக நிலையங்களும் இன்று முதல் (20) எதிர்வரும் ஓகஸ்ட் 31ஆம் திகதி வரை 12 நாட்கள் மூடப்படவுள்ளன.
காவத்தை பிரதேச சபை தலைவர் கே.எம்.ஜினதாச, காவத்தை பிரதேச செயலாளர் கயணி கரனாதிலக்க, காவத்தை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஸ்ரீநி அலகப்பெரும, காவத்தை சுகாதார வைத்திய அதிகாரி லக்மால் சுமனவீர, காவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அதுல பெரேரா மற்றும் காவத்தை வர்த்தக சங்கம் என்பன ஒன்றிணைந்து இத்தீர்மானம் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.










