சஜித்துக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்!

” முடிந்தால் விவசாயத்துறை அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வாருங்கள். அரசாங்கத்தின் பலத்தைக்காட்டுகின்றோம்.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு சவால் விடுத்துள்ளார், அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன.

அத்துடன், விவசாயிகளை பயன்படுத்தி எதிரணிகள் போராட்டம் நடத்துவதாகவும், இதன் பின்னணியில் முழுமையாக அரசியலே இருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, நாட்டை மீண்டும் 88-89 யுகத்தை நோக்கி அழைத்துச்செல்வதற்கு சிலர் முற்படுகின்றனர் என்று ஜே.வி.பியினரை மறைமுகமாக சாடியுள்ளார் அமைச்சர் நாமல் ராஜபக்ச.

Related Articles

Latest Articles