அரசை விமர்சிக்கும் தேரர்களுக்கு பதவிகள் – சஜித் அணி சீற்றம்

” இந்த அரசை கடுமையாக விமர்சிக்கும் தேரர்களுக்கு தற்போது பதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன. இவ்வாறான அரசியல் நியமனங்களால் நாட்டுக்கு நன்மை பயக்கப்போவதில்லை.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் உப செயலாளர் அசோக அபேசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாநாட்டில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச, நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச ஆகியோர் மட்டுமே உரையாற்றினர். இதன்மூலம் தமது மொட்டு கட்சி என்பது குடும்ப கட்சி என்ற தகவலை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் சில போலியான கருத்துகளை வெளியிட்டுள்ளனர். கடந்த ஆட்சியில்தான் பொருட்களின் விலைகள் இரட்டிப்பாக அதிகரிக்கப்பட்டன என்று ஜனாதிபதி குறிப்பிடுகின்றார். அப்படியானால் தற்போது என்ன நடக்கின்றது?

தேசிய வளங்கள் விற்கப்படாது என பிரதமர் அறிவிப்பு விடுக்கின்றார். பங்காளிக்கட்சிகளின் தலைவர்களும் மாநாட்டில் அமர்ந்துள்ளனர். அந்த பங்காளிகள் தேசிய வளங்களைக் காக்கவே தற்போது போராடுகின்றனர் என்பது பிரதமருக்கு தெரியதா?

ஞானசார தேரர், எல்லே குணவங்ச தேரர், முருத்தெட்டுவே ஆனந்த தேரர் உட்பட இந்த அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கிய தேரர்கள், அரசின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்துவருகின்றன.

இந்நிலையில் ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான செயலணிக்கு ஞானசார தேரர் நியமிக்கப்பட்டுள்ளார். முருத்தெட்டுவே ஆனந்த தேருக்கு உபவேந்தர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான அரசியல் நியமனங்களால் என்ன பயன்?” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles