அதிபர், ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடன் நிறைவேற்றவும் – திகா வலியுறுத்து

ஆசிரியர் மற்றும் அதிபர்களது நீண்ட கால கோரிக்கையை அரசாங்கம் தாமதமின்றி நிறைவேற்ற வேண்டுமென முன்னாள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவருமான பழனி திகாம்பரம் வலியுறுத்தி உள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்களும் அதிபர்களும் தங்களுடைய பிரச்சினைகளை முன்வைத்து நீண்ட காலமாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது போராட்டம் நியாயமானது. இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக தற்பொழுது பெற்றோர்களும் களம் இறங்கி இருக்கிறார்கள்.

பெற்றோர்கள் அவர்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துப் பல இடங்களில் பாடசாலைகளுக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலை தொடருமாக இருந்தால் மாணவர்களுடைய கல்வி பெரிதளவில் பாதிக்கப்படும்.

அத்துடன், கொவிட் பரவல் காரணமாக மாணவர்களின் கல்வி நிலை பின்தங்கி இருக்கிறது.

இந்த விடயத்தைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் ஆசிரியர் மற்றும் அதிபர்களுடைய கோரிக்கைகளைத் தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Articles

Latest Articles