‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ – ஜனாதிபதி செயலணியின் பதவி காலம் நீடிப்பு

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் மேலும் 03 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் மேலும் 03 மாதங்கள் வரை ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் அனைத்து மாகாணங்களும் உள்ளடங்கும் வகையில் பொதுமக்கள் மற்றும் புத்திஜீவிகளின் கருத்துக்களை பெற்றுக்கொள்வதற்கான தேவையுள்ளதால் பதவிக்காலம் நீடிக்கப்படுவதாக வர்த்தமானி அறிவித்தலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles