பொகவந்தலாவை பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
38 மற்றும் 43 வயதான பொகவந்தலாவை பகுதியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்களிடமிருந்து அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
எதிர்வரும் 8 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிப்பட்டு இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.










