ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள சர்வக்கட்சி மாநாட்டை, அரச பங்காளிக்கட்சியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் புறக்கணிக்க தீர்மானித்துள்ளது.
நாளை மறுதினம் 23 ஆம் திகதி நடைபெறும் சர்வக்கட்சி மாநாட்டில் பங்கேற்குமாறு நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எனினும், குறித்த மாநாட்டில் பங்கேற்காதிருக்க பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி உள்ளிட்ட கட்சிகள் தீர்மானித்துள்ளன.
இந்நிலையிலேயே அரச பங்காளிக்கட்சியான இ.தொ.காவும் இந்த முடிவை எடுத்துள்ளது.










