காலி முகத்திடல் சம்பவம்- நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 25 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நடவடிக்கை

காலி முகத்திடல் சம்பவத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 25 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த, பவித்ரா வன்னியாராச்சி, மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட 25 பேரிடம் வாக்குமூலம் பெறுவதற்கு இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காலி முகத்திடலில் இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் இன்று பணிப்புரை விடுத்தமைக்கு அமைய குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles