மஹிந்த பதவி விலகி இருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காது – சமல் ஆதங்கம்

” ஜனாதிபதி பதவியை இரு தடவைகள் வகித்த பிறகு, மஹிந்த ராஜபக்ச, அரசியலில் இருந்து ஓய்வுபெற்றிருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் இன்று எல்லா வழிகளிலும் துயரப்பட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.”

இவ்வாறு மஹிந்த ராஜபக்சவின் மூத்த சகோதரரும், முன்னாள் சபாநாயகருமான சமல் ராஜபக்ச தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (19) உரையாற்றிய அவர், அரசியலில் ‘விட்டுக்கொடுப்பு’ களை செய்யவும் பக்குவப்பட்டிருக்க வேண்டும், மாறாக பதவி ஆசையில் மூழ்கினால், இவ்வாறான சம்பவங்களுக்கு முகங்கொடுக்கவும் நேரிடும் எனவும் சுட்டிக்காட்டினார்.

” 1931 இல்தான் ராஜபக்சக்களின் அரசியல் பயணம் ஆரம்பமானது. சொத்துகளை அடகுவைத்துதான் அரசியல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அவ்வாறு அடகு வைத்த சொத்துகளை மீள பெறமுடியாமலும் போனது. அன்று முதல் இன்றுவரை அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருவதால்தான் அரசியலில் நீடிக்க முடிகின்றது.

தனது 50 வருடகால அரசியல் வாழ்வில் மஹிந்த ராஜபக்ச பல தியாகங்களை செய்துள்ளார். இரு தடவைகள் ஜனாதிபதி பதவியை வகித்த பிறகு, அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவ்வாறு செய்யாததால்தான் இன்று எல்லாவித துன்பங்களையும் சந்திக்க நேரிட்டுள்ளது.

எனவே, உரிய நேரத்தில் விடைபெறுவதற்கும் பழகிக்கொள்ள வேண்டும்.” எனவும் சமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles