ஊவா மாகாண ஆளுநர் பதவிக்கு மும்முனை போட்டி நிலவுகின்றது என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினரான யோகராஜன், இ.தொ.காவின் உறுப்பினர் ஒருவர் மற்றும் மொட்டு கட்சி பிரமுகருக்கிடையில்தான் இப்போட்டி நிலவுகின்றது.
சர்வக்கட்சி அரசை ஆதரிப்பதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முன்வைத்த நிபந்தனைகளில் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவி மற்றும ஆளுநர் பதவி என்பனவும் உள்ளடங்குகின்றன.
இக்கட்டான சூழ்நிலைகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் செயற்பட்டவர்தான் யோகராஜன். அவருக்கு ஐக்கிய தேசியக்கட்சி தேசியப்பட்டியல் வாய்ப்பைக்கூட வழங்கியிருந்தது.
எனவே, யாருக்கு ஊவா மாகாண ஆளுநர் பதவியை வழங்குவது என்பது குறித்து தற்போது இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
