உள்ளூராட்சிமன்ற தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிடுவதற்கு ஆளும் கூட்டணியின் இரு பிரதான பங்காளிகளும் தீர்மானித்துள்ளன.
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும், மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுமே இந்த முடிவை எடுத்துள்ளன.
இரு தரப்பு பிரதிநிதிகளுக்கும் இடையில் கொழும்பில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின்போதே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சில சபைகளுக்கு யானை சின்னத்திலும் , சில சபைகளுக்கு மொட்டு சின்னத்திலும் ஏனைய பகுதிகளில் பொது சின்னத்தின்கீழும் போட்டியிட முடிவெடுக்கப்பட்டுள்ளது.










